2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'முடியாத ஏக்கங்கள்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 30 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

'முடியாத ஏக்கங்கள்' என்ற சிறுகதைத்தொகுதி நூல் வெளியீட்டு விழா நாளை  சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த வே.சந்திரகலாவின் 'முடியாத ஏக்கங்கள்' என்ற சிறுகதைத்தொகுதியே இவ்வாறு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு சமூகசேவை உத்தியோகத்தர் த.தனசீலனின் தலைமையில் நடைபெறவுள்ள
இந்த நிகழ்வில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கலையருவி நிறுவனத்தின் இயக்குனருமான அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் மா.சிறிஸ்கந்தகுமார், மாந்தை மேற்கு பிரதேசசபை தவிசாளர் சு.வரப்பிரகாசம், ஊடகவியலாளர்  பொ.மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

கௌரவ விருந்தினர்களாக மடு வலய தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளர் வல்லிபுரம் நாகம்மா, அடம்பன் பங்குத்தந்தை அருட்திரு லக்கோன்ஸ் பிகிராடோ, மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்திரு இ.செபமாலை, அடம்பன் மத்திய மகாவித்தியாலய அதிபர் த ம.கிறிஸ்ரியான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

நூல் மதிப்பீட்டு உரையை இ.அபிகைபாலனும் நூல் நய உரையை தமிழ் ஆசிரியை பரமேஸ்வரி சில்வேஸ்திரனும் ஆற்றுகின்றனர்.
நிகழ்த்துகின்றனர். மன்னார் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான தேனீ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .