2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எழுவானிற் கலை விழா

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,)

மட்டக்களப்பில் எழுவானிற் கலை விழா முதற் தடவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யு.வெளிக்கள தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் கே.பிரேம்குமார் மட்;டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் மலர்ச்செல்வன் உட்பட கலாசார உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் நடனம், கூத்து, பொல்லடி, காவடி நடனம் போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

.இதேவேளை, இவ்விழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .