2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. மாவட்ட மக்கள் கலை இலக்கிய விழா

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கலை இலக்கிய விழாவும் மக்கள் கலை இலக்கிய மாநாடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார்,  மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் தி.மலாச்செல்வன் உட்பட கலை இலக்கியவாதிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .