2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காதலர் தினத்தையொட்டி பாடல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியாவை சேர்ந்த இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில், காதலர் தினத்தை முன்னிட்டு 'பேஸ்புக்' என்னும் காதல் பாடல் வெளியீட்டு விழா வவுனியா ஸ்டார் மீடியா கலையகத்தில் கந்தையா ஸ்ரீகந்தவேள் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வவுனியா நகரபிதா எஸ்.என்.ஜி.நாதனும் சிறப்பு விருந்தினர்களாக  வவுனியா தம்பா ஹோட்டல் உரிமையாளர்  பிரமேந்திரராஜா, வவுனியா நகரசபை வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்பாடலுக்கான இசையினை இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் சிந்துராகவன் எழுதினார். மு.ஜெயந்தன், மனோஜ், மு.பிரதா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .