2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'படைப்பு' காணொலி சஞ்சிகை வெளியீடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


'படைப்பு' எனும் காணொலி சஞ்சிகையொன்று நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

காத்தான்குடி கலாசார மத்திய நிலையம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் அனுசரணையுடன் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜியினால் தொகுக்கப்பட்ட இக்காணொலி சஞ்சிகையின் வெளியீட்டு வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு இதனை வெளியீட்டு வைத்தார்.

இவ்வைபவத்தில் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எஸ்.சியாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .