2025 நவம்பர் 22, சனிக்கிழமை

வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஆண்டு விழா

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 25ஆம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் கலாசார மண்டபத்தில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி க.பேணாட், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா தெற்கு கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் மக்கள் மாமணி நா.சேனாதிராஜா, வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ச.சுப்பிரமணியம், வவுனியா இந்துமா மன்றத்தின் செயலாளர் சி.ஏ.இராமஸ்வாமி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வின் தொடக்கவுரையை கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் உபதலைவர் ந.பார்த்தீபனும் மாருதம் சஞ்சிகையின் 13 இதழின் வெளியீட்டுரையை கவிஞர் தனசீலனும் அறிமுகவுரையை பா.பாலசுந்தரமும் ஆற்றவுள்ளனர்.  முதற்பிரதியை அருட்கலைவாரிதி கலாபூசணம் ஸ்தபதி சு.சண்முகவடிவேல் பெறவுள்ளார்.

அத்துடன் வட்டூர்க் கவிஞர் கதிர் சரவணபவனின் செம்மொழி மீளாய்வு நூலின் முதற்பிரதியை வவுனியா வடக்கு பிரதேச செயலக காணி உத்தியோகஸ்தர் வி.குகேந்திரன் பெறவுள்ளார். இதற்கான அறிமுகவுரையை சைவப்புலவர் கலாபூசணம் செ.குணபாலசிங்கம் வழங்கவுள்ளார்.

இதன்போது சான்றோர் கௌரவிப்பில் இம்முறை ஆங்கில கல்விச் செல்வர் விருதினை சு.சிவபாலனும் தேகாந்தநிலையில் முத்தமிழ் செல்வர் விருதினை வட்டூர் கவிஞர் கதிர் சரவணபவனும் பெறவுள்ளதுடன், கௌரவிப்புரையை யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.ஸ்ரீகணேசன் ஆற்றவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X