2025 நவம்பர் 22, சனிக்கிழமை

யாழ். இசை விழா ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 01 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத்

யாழ். இசை விழா 2013 நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணி முதல் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்னால் உள்ள மாநகரசபை பொது மைதானத்தில் ஆரம்பமாகியது. சேவா லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில், நோர்வே தூதரவாலயம், சர்வதேச அபிவிருத்திக்கான ஜக்கிய அமெரிக்காவின் முகவர்; (யூஎஸ்எயிட்) ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஆரம்பமான யாழ். இசை விழா இன்றும் நாளை சனிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

சமய பெரியார்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமான, ஆரம்ப நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்தருசிங்க, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, நோர்வே தூதுவர் க்ரேட்டா லோஷன், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் (யூஎஸ்எயிட்) நிறுனவத்தின் ஆசியாவிற்கான டெனிஸ் றோலின்ஸ் சிரேஸ்ட பிரதி உதவி நிர்வாகி, சர்வதேச அபிவிருத்திக்கான ஜக்கிய அமெரிக்காவின் முகவர்; (யூஎஸ்எயிட்) நிறுவனத்தின் செயற்றிட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் பெட்னர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இசை விழாவில் இலங்கை பாரம்பரிய கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன், பங்களாதேஸ், இந்தியா, நோர்வே, பலஸ்தீனம் ஆகிய நாடுகளின் இசைக் கலைஞர்களும் இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X