2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நடமாடும் சேவையில் பாரம்பறிய கலைகள் மேடையேற்றம்

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களினால் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு பொது மக்களின் நன்மை கருதி நடாத்தப்பட்ட நடமாடும் சேவைகளின்போது பாரம்பரிய கலை நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

போட்டி நிகழ்வாக நடத்தப்படும் இக்கலை நிகழ்வுகளில் முதல் மூன்று இடங்களையும் பெறுபவர்களுக்கான இறுதித் தேர்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட பொலிஸ் மா அதிபர் எ.இந்திரன் தiiமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள மாணவர்கள் கலந்துகொண்டனர்.  

இத்தேர்வில் 1ஆம் இடம்பெறுபவர்கள் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி-2013 நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் மாவன் சில்வா, தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ரத்நாயக்கா, வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.உவைஸ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .