2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வாகரையில் கலாசார நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 21 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாகரை பொலிஸார், கண்டலடி மற்றும் ஊரியன்கட்டு சிவில் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து கலாசார நிகழ்வொன்றை நடத்தினர்.

எஸ்கோ நிறுவனம் மற்றும் ஆசிய அமைப்பின் அனுசரணையில் வாகரை மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இக்கலாசார நிகழ்வு நடைபெற்றது.

வாகரை வடக்கு சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர் எஸ்.மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித ஜெயரத்ன, எஸ்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிறுவர் கழகங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. அத்துடன், சிவில் பாதுகாப்புக் குழுக்கழுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .