2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'வடக்கே போகும் மெயில்' சிறுகதை தொகுதி வெளியீடு

Kogilavani   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூரன் ஏ.ரவிவர்மாவின் 'வடக்கே போகும் மெயில்' சிறுகதை தொகுதி வெளியீடுயும் ராஜ ஸ்ரீ காந்தன் நினைவு நிகழ்வும் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் கொழும்பு, தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது.

மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுகொண்டார்.

நூலின் அறிமுகம் மற்றும் வாழ்த்துரையை  பேராசிரியர் மா.கருணாநிதி வழங்கினார்.

கருத்துரையை கே.எஸ்.சிவகுமாரனும் ஏ.ஆர்.வி.வாமலோஜனும் மற்றும் ஏற்புரையை சூரன்.ஏ.ரவிவர்மாவும் வழங்கினர்.

ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுரையை மேமன் கவி வழங்கினார்.

இந்நிகழ்வில், கலைஞர்கள்  ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.













  Comments - 0

  • varmah Wednesday, 24 April 2013 10:47 AM

    நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .