2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னாரில் முழு நிலா கலை விழா

Suganthini Ratnam   / 2013 மே 22 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முழு நிலா கலை விழாவை மன்னார் முருங்கன் ம.வி. பாடசாலையில் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.

பிரதேசங்களில் காணப்படுகின்ற கலை, பண்பாடு விழுமியங்களை கட்டிக்காக்கும் முகமாகவும் அவற்றை இன்றைய இளையோருக்கு பரப்பும் முகமாகவே இவ்விழாவை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் மன்னார் கல்வி வலயம் இந்தமுறை  இந்த விழாவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பல கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். நாட்டுக்கூத்து, மேடை நாடகங்கள் உட்பட  பல நிகழ்வுகளில் சாதனை புரிந்த சாதனையாளர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .