2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இறுவட்டு வெளியீடு

Kogilavani   / 2013 ஜூன் 17 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, அரசடித்தீவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்சார் பக்தி பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு  ஆலய வளாகத்தில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (16.6.2013) நடைபெற்றது.

அரசடித்தீவு விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்ற தலைவர் சி.ருசகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மனின் பக்திப்பாடல் அடங்கிய இறுவட்டுக்களை தயாரித்த த.கோகுலறமணன், பாடலாசிரியர்கள் கிராமியக் கலைச்சுடர் கவிஞர்.செ.முருகுப்பிள்ளை, அரசையூர் மேரா ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .