2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

களுமுந்தன்வெளி விநாயகர் கலைக்கழக முப்பெரும் விழா

Kanagaraj   / 2013 ஜூன் 20 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தில் 27 ஆவது நிறைவை முன்னிட்டு முதற்தடவையாக முப்பெரும் விழா கழகத்தலைவர் மு.சௌந்தரராசன் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் த.வசந்தராசா, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளரும், மாவட்ட செஞ்சிலுவைச் சங்க செயலாளருமான சா.மதிசுதன், உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன், வெல்லாவெளி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஆ.பிரபாகரன், களுமுந்தன்வெளி பாடசாலையின் முன்னாள் அதிபர்களான க.மயில்வாகனம், வீ.கோபாலப்பிள்ளை, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் தே.தேவசுந்தரம், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் செ.சவுந்தரராசா, நாடக ஆசிரியர் சி.சிவகுமார் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு முப்பெரும் விழாவாக சாதனையாளர் பாராட்டுக்கள், பரிசளிப்பு நிகழ்வு, சிறந்த சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்பெற்றது.


இதில் 1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் களுமுந்தன்வெளி பாடசாலையில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற 35 பேர், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 03 பேர் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 6 பேர், கல்வியற் கல்லூரிக்கு தெரிவான 5 பேரும் சாதனையாளர் விருதுகளையும், பரிசில்களையும் பெற்றனர்.

அத்தோடு விவசாயத்துறை, தேசிய மட்ட விளையாட்டு, கல்வித்துறை, சமூக சேவையாளர்கள், ஊடகத்துறை போன்றவற்றின் தெரிவு செய்யப்பட்ட 22 சிறந்த சமூக சேவையாளர்களை கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்சமூக சேவையாளர் கௌரவிப்பில் சிறந்த சமூக சேவையாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் த.வசந்தராசா, வெல்லாவெளி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஆ.பிரபாகரன், உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன், களுமுந்தன்வெளி பாடசாலை முன்னாள் அதிபர்களான க.மயில்வாகனம், வீ.கோபாலப்பிள்ளை, மற்றும் பலரும், இதில் சமூகத்தின் சிறந்த சமூக ஊடகவியலாளராக களுமுந்தன்வெளி பிரதேச இளம் ஊடகவியலாளர் வ.சக்திவேல் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் விநாயகர் கலைக் கழகத்தினரால் இயற்றிய வரவேற்பு நடனம் கலைக் கழக மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. அத்தோடு சிங்கள பாடலுக்கான அபிநயமும் இடம்பெற்றது.

இவ்கௌரவிப்பானது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மென்மேலும் அதிகரிப்பதாக தாங்கள் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அத்தோடு வளர்ந்து வரும் சந்ததியினரும் இதனை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என கலைக் கழக செயலாளர்; தெ.சிவபாதம் தெரிவித்தார்.

களுமுந்தன்வெளி கிராம வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசமானது நீர், வீதி புனரமைப்பு இன்மை மற்றும் போக்குவரத்து உட்பட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழும் மக்களைக் கொண்ட பிரதேசமாகும்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .