2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'நிகழ்காலத்துப் பூக்கள்' கவிதை நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 25 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலையில் கவிஞர் ஜெயா தமிழினியின் 'நிகழ்காலத்துப் பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் தலைமையுரையாற்றினார்.  கவிஞர் செல்விதாசன் நூல் மதிப்புரை செய்தார். நூலாசிரியர் ஏற்புரை வழங்கினார்.

நிகழ்வின் முதன்மை விருந்தினரான கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ஜனாப் யு.எல்.ஏ.அஸீஸ் நூலாசிரியரின் தாய்க்கு முதல் பிரதியை வழங்கிவைத்தார்.  நூலாசிரியர், முதன்மை அதிதிக்கு நூலினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலையைச் சார்ந்த பெருமளவான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .