2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சஞ்சிகைகளின் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 26 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறையின் ஏற்பாட்டில் சஞ்சிகைகளின் கண்காட்சி நேற்று செவ்வாய்க்கிழமை காலை அப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை கலைக்கூடத்தில் ஆரம்பமானது.

மொழித்துறைத் தலைவி கலாநிதி நதிரா மரியசந்தானம் தலைமையில் இக்கண்காட்சி ஆரம்பமானது. இதில்; பிரதம அதிதியாக கலந்துகொண்ட உபவேந்தர் கலாநிதி கிட்னண் கோபிந்தராஜா கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

இதற்கான நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலை கலாசாரப்பீட பீடாதிபதி, பேராசிரியர் மா.செல்வராஜா, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் .கே.மகேசன் கௌரவ விருந்தினர்களாக பேராசிரியை மௌ.சித்திரலேகா, மண்முனை மேற்கு பிரதேச செயலாளரும் படி சஞ்சிகையின் ஆசிரியருமான வெ.தவராஜா ஆகியோர்  கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .