2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

றஷ்மியின் கவிதை நூல்கள் பற்றிய உரையாடல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 10 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்

கவிஞரும் ஓவியருமான றஷ்மியின் இரு கவிதை நூல்கள் பற்றிய உரையாடல் நிகழ்வு யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இயல்வாணன் தலைமையில்; 'ஈ தனது பெயரை மறந்து போனது', 'ஈதேனின் பாம்புகள்' ஆகிய நூல்கள் தொடர்பில்  உரையாடப்பட்டன.

இதன்போது விமர்சன உரையை கவிஞர் ந.மயுரரூபனும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் என். செல்வமனோகரனும் ஆற்றினர். அறிமுகவுரையை கவிஞர் சித்தாந்தன் ஆற்றினார். 

இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இயல்வாணன் தலைமை உரையாற்றும்போது, கால் நூற்றாண்டு  காலத்துக்குப் பின்னர் ஒரு முஸ்லிம் படைப்பாளியின் நூல் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகும். புதிய வரலாறொன்றின் தொடக்கமாக இந்நிகழ்வை நான் பார்க்கிறேன். றஷ்மியின் படைப்புகள் சமகால – கடந்த கால வரலாற்றின் சாட்சியமாகவும் புதிய வரலாறொன்றின் தொடக்கமாக உள்ளன. ஒரு தீர்க்கதரிசனமுள்ள கவிஞன் இப்படித்தான் சிந்திப்பான். அவனுடைய அடையாளம் இப்படியே அமையுமெனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .