2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வானவில்லின் வர்ணங்கள் மேடையேற்றம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 11 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழருவி கலாசார விழாவில் கிழக்குப் பல்கலைக்கழக கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களின் வானவில்லின் வர்ணங்கள் நிகழ்வு அண்மையில் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வின் வடிவமைப்பு மற்றும் நடன ஒழுங்கமைப்பினை பேராசிரியர் சி.மௌனகுரு மேற்கொண்டிருந்தார். 

மாரி அம்மன், காளி அம்மன் கோவில்களில் பாடப்படும் சடங்குப் பாடல்கள், பறைமேள முழக்கம், மேளங்கள் பேசுகின்றன (தோல் வாத்தியங்களின் சங்கமம்), சக்திமிக்க பரத நாட்டியம், மட்டக்களப்பின் வீரியம்மிக்க வடமோடிக்கூத்து, அரசர் ஆட்டம்,  கூத்துத் தாளக்கட்டுக்கு கண்டிய நடனம், பன்மையின் ஒருமை (கூத்துத் தாளக்கட்டில் இணையும் பரதமும் கண்டிய நடனமும்) ஆகியற்றைக் கொண்டதாக வானவில்லின் வர்ணங்கள்  கலை நிகழ்வு அமைந்தது.

வானவில்லில் பல நிறங்கள் இலங்கை பண்பாட்டிலும் பல பிரிவுகளான வானவில்லின் அழகு அதன் ஏழு நிறங்களால் உருவானது போல இலங்கையின் மானிட அழகும் அதன் பல்லினப் பண்பாட்டால் உருவாகியுள்ளது என பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.

இவற்றிற்கிடையே பொதுத்தன்மைகளுமுண்டு வேற்றுமைகளுமுண்டு. பொதுத்தன்மைகளும் வேற்றுமைகளும் கலந்ததுதான் பண்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

நாம் பொதுத் தன்மைகளைக் கொண்டாடுவோம். தனித் தன்மைகளைப் பேணுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .