2025 மே 08, வியாழக்கிழமை

புற்றுநோயும் நாமும் நூல் வெளியீடு

Super User   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

தாதி உத்தியோகத்தரான எம்.சி.எம்.கமறுற் றிழா எழுதிய 'புற்றுநோயும் நாமும்' நூல் வெளியீட்டு விழா நேற்று  செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், உளவளத்துறை வைத்திய நிபுணர் டாக்டர் யூ.எல்.ஷராப்தீன், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அருட்சகோதரி ஜே.ஜோசப் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர்.

நூலின் வெளியீட்டு உரையை ஏ.எம்.எம்.றியாத், உள்ளடக்க உரையை டாக்டர் யூ.எல்.சராப்தீன், சிறப்புரையை அருட்சகோதரி ஜே.ஜோசப், ஏற்புரையை நூலாசிரியர் எம்.சி.எம்.கமறுற் றிழா ஆகியோர்கள் நிகழ்த்தினர். இந்த நூலின் முதற பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X