2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தனிநாயகம் அடிகளாரின் சிறப்பு இதழாக மகுடம் சஞ்சிகை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிவரும் 'மகுடம்' சஞ்சிகையின் ஆண்டு மலர் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் சிறப்பு இதழாக வெளியிடப்படவுள்ளது.

மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், கிழக்கிலங்கை சிற்றிதழ்கள் ஒன்றியத்தின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி கலாமதி பத்மராஜா கலந்து கொள்ளவுள்ளார்.  சிறப்பு விருந்தினர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சீ.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் கலந்துகொள்ளவுள்ளனர். கௌரவ விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் க.மகேசன் கலந்துகொள்ளவுள்ளார்.

ஈழத்து இலக்கியப் பரப்பில் மகுடத்தின் வளர்ச்சிக்கும் வருகைக்கும் வளம் சேர்க்கும் வகையில் கிழக்கிலங்கை சிற்றிதழ்கள் சங்கம் விழாவை ஏற்பாடு செய்துள்ளதாக   சஞ்சிகையின் ஆசிரியர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.

இதன் முதல் பிரதியை மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவரும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க பொருளாளருமான வி.ரஞ்சிதமூர்த்தி பெறுகிறார்.

வெளியீட்டு உரையை மலைமுரசு பிரதம ஆசிரியர் ஸ்ரீ.ஞானேஸ்வரனும் விமர்சன உரையை மண்முனை மேற்கு- வவுணதீவு  பிரதேச செயலாளர் வெ.தவராஜாவும் ஈழத்து சிற்றிலக்கிய வரலாற்றில் மட்டக்களப்பும் மகுடமும் என்ற தலைப்பில் சிறப்பு உரையை முன்னாள் வடகிழக்கு மாகாண உதவி கலாசார பணிப்பாளர் செ.எதிர்மன்னசிங்கமும் நிகழ்த்தவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .