2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ். பல்கலையில் கதைபேசும் நாடகங்கள்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயல்திறன் அரங்க இயக்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இளையோர் நாடக விழா நாளை சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இந்நாடகமானது இரு கட்டமாக மேடையேற்றப்படவுள்ளது. முதல் கட்டம் காலை 10.00 மணிக்கும் இரண்டாம் கட்டமாக மாலை 4.00 மணிக்கும் நடைபெறவுள்ளது.

இதில் 'கருப்பைத் தறுக்கணிப்பு', 'வெப்பக் குடுவை' ஆகிய நாடகங்களும் மற்றும் 'ஈசி லீசிங்' என்ற குறு நாடகமும் 'கடலில் கிடந்த பெருமூச்சு நல்லதங்காள்' ஆகிய ஓராள் அரங்காற்றுகைகளும் நடைபெறவுள்ளன.

இந்நாடகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட வீ வடிவ அரங்கில் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .