Thipaan / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
நிந்தவூர் கலாசார பேரவை மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய கலாசார விழா மற்றும் வரலாறும் வாழ்வியலும் எனும் நூல் வெளியீடு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை(04) நடைபெற்றன.
பஜரதேச செயலாளர் ஆர்.யூ. அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் சுசிந்த பி. வணிகசிங்க உள்ளிட்ட அதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நிந்தவூரின் வரலாறு மற்றும் வாழ்வியல் தொடர்பான உரைகள், கவிதைகள், பாடல்கள் மற்றும் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
மேலும் சமூக சேவையாளர்கள், சாதனையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


25 Apr 2026
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Apr 2026
25 Apr 2026