Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலையில் அமைந்துள்ள ஈழத்து புகழ்பெற்ற ஆலயமான திருக்கோணேஸ்வர ஆலய ஆய்வு நூல் வெளியீடு சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் இன்று சனிக்கிழமை(20) நடைபெற்றது.
ஆயிரம் பக்கங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்நூலானது 'திருக்கோணேஸ்வரம்' என்ற பெயருடன் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினரால் வெளியீடப்பட்டுள்ளது .
சுவிஸ் நாட்டில் இயங்கி வரும் திருக்கோணேஷர் நாட்டியாலயம் மற்றும் சுவிஸ்-திருகோணமலை சங்கம் ஆகியன இணைந்து இந்நூல் வெளியீட்டு நிகழ்வினை நடத்தினர்.
திருகோணமலையைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான காசிநாதர் சிவபாலன, கனடா-திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குஞ்சிபாதம் தயாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
8 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Apr 2026