Sudharshini / 2015 ஜூன் 29 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 29ஆவது ஆண்டு நிறைவையிட்டு கலைவிழாவும் பாராட்டு நிகழ்வும் களுமுந்தன்வெளி விநாயகர் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
இந்நிகழ்வில் புராண மற்றும் இதிகாச நாடகங்கள், கோலாட்டம், கும்பி என்பன மேடையேற்றப்பட்டதுடன், களுமுந்தன்வெளிக் கிராமத்திலிருந்து கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 2 மாணவர்களுக்கும், கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையில் சித்தி பெற்ற 17 மாணவர்களும், பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான 04 மாணவர்களுக்கும் பரிசில்களும் ஞாபகச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், சமூக சேலையில் ஈடுபட்டு வரும் 9 சமூக சேவையளர்கள் களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விநாயகர் கலைக் கழகத்தின் தலைவர் மு.சவுந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபைபின் பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை, பாடசாலை அதிபர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
18 minute ago
47 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
47 minute ago
55 minute ago