Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் இலக்கிய கருத்தரங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (09) முற்பகல் 9 மணிக்கு சங்கத்தின் தலைவர் வே. இறைபிள்ளை தலைமையில் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கந்தையா பொன்னம்பலம் நினைவாக நடைபெற உள்ள நிகழ்வில் நினைவுரையை 'தாய்மொழிக் கல்வி' எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் நிகழ்த்த உள்ளார்.
சிறப்புரையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் நிகழ்த்த உள்ளார்.
'கைகேயி சூழ் வினைப்படலம்' எனும் தலைப்பில் சிறுகதை முனைவர் திருவாட்டி மனோன்மணி சண்முகதாஸ் உரையாற்றவுள்ளார்.
கட்டுரை, நாவல் எனும் தலைப்பில் பேராசிரியர் தி.வேல்நம்பி, தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் எனும் தலைப்பில் கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் ந.குகபரன், ஈழத்து இலக்கிய வரலாறு எனும் தலைப்பில் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியர் சு.லோகேஸ்வரன் ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago