Princiya Dixci / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

'உயிருள்ளவரை ஏனோ...', ' சிறு தூரம் நீயும் சென்றால்...' ஆகிய பாடல்களின் வெளியீட்டு விழா, திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பிரதான கலையரங்கில் எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி, காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12.30 வரை நடைபெறவுள்ளது.
சாய்மதுரம் கிரியேஷன் தயாரிப்பில் SKY கிரியேஷன் இதனை வழங்குகின்றது.
இயக்குநர் தம்பலகாமம் லு. சுஜீதனின் இயக்கத்தில் ஈழத்து கலைஞர்களான ஜெராட், ரொசில்டா மற்றும், கிரிஷ், திவ்யா நடிப்பில் உருவான 'உயிர்வரை ஏனோ...' பாடல் உருவாகியுள்ளது.
அத்துடன், ' சிறுதூரம் நீயும் சென்றால்' என்ற பாடலுக்கு இயக்குநர் தம்பலகாமம் லு.சுஜீதனே இசையமைத்துள்ளார்.
இவ்விழாவுக்கு ஈழத்துக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago