Sudharshini / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
ஐ.தி.சம்பந்தனின் 'தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஒரு வரலாற்றுப் பதிவு' மற்றும் 'சாதனையாளரின் முத்துவிழா மலர்' ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா, நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.
கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா கலந்துகொண்டு, நூல்களை அறிமுகம் செய்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி வழங்கிய, பண்டார வன்னியன் வரலாற்று நாடகமும் இடம்பெற்றது.
17 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
31 minute ago