Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புதுநகர் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் செம்மொழி கல்வி மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிரேஸ்ட பிரஜைகள் சம்மேளனத்தின் தலைவருமான மு.வாமதேவனின் 'புதுநகரும்புதுநகர் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய வரலாறும்' எனும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் க.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் விசேட அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,உதவி ஆணையாளர் நா.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
9 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
30 Aug 2025