Niroshini / 2016 மே 13 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
புங்குடுதீவைச் சேர்ந்த இளம் கவிஞரான புங்கையூர் ராகுலன் எனும் விவேக் ராகுலனின் 'புலம்பெயரும் மனித வாழ்க்கை' எனும் கவிதை நூல் வெளியீடு செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 04 மணியளவில் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் டயான் தலைமையில் இடம்பெற்றது.
படைப்பாளிகள் உலகத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இக்கவிதை நூல் வெளியிடும் நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு வைத்தார்.
நிகழ்வில், படைப்பாளிகள் உலக இயக்குனர் ஐங்கரன் கதிர்காமநாதன், வைத்தியகலாநிதி க.சிறிதரன், சர்வோதய இயக்குனர் செல்வி பொன்.ஜமுனாதேவி, புங்குடுதீவு தாயகம் அமைப்பின் போஷகர் சுலோச்சனா தனபாலன், புங்குடுதீவு அமெரிக்கமிஷன் பாடசாலை அதிபர் வி.யோகராணி, நல்லூர் பிரதேச கிராம அலுவலர் ப.தர்சானந், பாடகர் எஸ்.ஜி.எஸ்.கோகுலன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.



7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025