2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முத்தமிழ் விழா

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவை நடத்தும் முத்தமிழ் விழா இன்று செவ்வாய்க்கிழமை பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கல்குடா நாமகள் வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனம், கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவிகளின் கிராமிய நடனம், கிராமியப் பாடல், வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவிகளின் கிராமிய நடனம், நல்லதம்பி அண்ணாவியாரினால் மத்தள வாத்திய இசை, வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளி அமைப்பினரின் நாடகம் என்பன இடம்பெற்றன.

கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவை நடத்திய கலாசார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் உடுக்கு வாத்திய கலைஞர் சதாசிவம் கதிர்காமர் பிரதேச கலாசார பேரவையால் கரலஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு இளம் பரிதி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வின் போது முதல் பிரதியினை வாழைச்சேனை பிரதேச செயலாளர் வ.வாசுதேவனினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கு வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X