Freelancer / 2022 நவம்பர் 24 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப். முபாரக்
கந்தளாயில் 85 இலட்சம் ரூபாயை மோசடி செய்த நபருக்கு எட்டு வருட சிறைத்தண்டனையும் எட்டு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் நேற்று (23) உத்தரவிட்டார்.
கந்தளாய், லைட்வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர், நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியான காலகட்டத்தில், டீசல், பெற்றோல் போன்ற எரிபொருட்களைப் பெற்றுத்தருவதாக கூறி, பலரிடம் 85 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார்.
பணத்தை இழந்தவர்கள் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், ஓகஸ்ட மாதம் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சிறைதண்டனை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago