Janu / 2024 ஜூன் 12 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலயக்கதவு திறந்த அதே தினம் ஆலயத் தலைவர் மரணமான சம்பவம் சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (11) இரவு இடம் பெற்றுள்ளது .
சம்மாந்துறை, கோரக்கர்கிராம அகோரமாரியம்மன் ஆலயம் மற்றும் கோரக்கர் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் தலைவரான 66 வயதுடைய ம.பாலசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வருடாந்த தீமிதிப்பு திருவிழா உற்சவத்திற்காக ஆலயபூசகர் மு.ஜெகநாதன் தலைமையில் கடல் நீர் எடுத்து வந்து ஆலயக் கதவு செவ்வாய்க்கிழமை(11) காலை திறக்கப்பட்டுள்ளதுடன் அன்றிரவு 7 மணியளவில் ஆலய பரிபாலன சபையின் தலைவர் பாலசுப்பிரமணியம் இறைபதமடைந்தார்.
கடந்த 25 வருடகாலமாக இறைபணி செய்த அவரின் மரணச் செய்தி பலரது மனங்களையும் நெகிழச்செய்தது.
மேலும் அவரது பூதவுடல் கோரக்கர் மயானத்தில் புதன்கிழமை (12) அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
வி.ரி சகாதேவராஜா


32 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
2 hours ago