Editorial / 2026 மார்ச் 27 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, பொத்துவிலில் வெள்ளிக்கிழமை (27) பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும், சுயாதீன இளைஞர் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான கண்டனப் பேரணி, பொத்துவில் ஆதார வைத்தியசாலை வரை சென்றது.
அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்காகவும், ஏகாதிபத்திய நோக்கத்திற்காகவும் ஈரான் மீது தொடுத்துள்ள இந்தப் போர், உலகளாவிய ரீதியில் பாரிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தப் போர் தொடருமானால் இலங்கை போன்ற நாடுகள் கடுமையான பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனவே, இலங்கை அரசு இது தொடர்பாகத் தீர்க்கமான சர்வதேச நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் வரிசையில் தற்போது ஈரான் மீதும் யுத்தம் திணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், இதனால் கொல்லப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்காகத் தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
உலகச் சமாதானத்தை நிலைநாட்டவும், போர்ச் சூழலைத் தணிக்கவும் இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை வலுவாக வடிவமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்திற்காக அப்பாவி நாடுகளைப் பலியிடுவதை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.


7 minute ago
7 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 minute ago
26 minute ago
46 minute ago