Ilango Bharathy / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண அமைச்சு மற்றும் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை திருகோணமலைக்கு ஏற்றிச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவையொன்று இயங்கி வருகின்றது.
இச்சேவையானது தினமும் அதிகாலை 5.45 மணிக்கு மட்டக்களப்பிலிருந்தும், மாலை 4.30 மணிக்கு திருகோணமலையிலிருந்தும் இயங்கி வருகின்றது.
எனினும் இப் பஸ்சேவையானது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மாதத்தில் மூன்று நாட்கள் இடைநடுவில் பழுதடைந்து விடுவதாகவும், டயர் காற்றுப்போகும் நிலைமையே காணப்படுவதாகவும், இதனால் உரிய நேரத்துக்கு தங்களின் அலுவலக கடமைக்கு செல்ல முடியாது அன்றைய தினம் அரைநாள் விடுமுறையாகவும் செல்கின்றது என அதில் பயணிக்கும் அரச உத்தியோகத்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை உடனடியாகப் பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளை அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago