Editorial / 2026 மார்ச் 16 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்
ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தோப்பூர் - 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஜௌசீர் அமான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்த நிலையில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மற்றைய இரு இளைஞர்களும் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் உடல் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago