Freelancer / 2023 ஜனவரி 19 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுவை, ஜனவரி 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (17) எம்.ஏ மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனு மீதான விசாரணையின் அடிப்படையில் இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 19ஆம் திகதி வரையில் குறித்த மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க முடியாது. அத்துடன் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கல்முனை மாநகர மேயர் மற்றும் சபையின் உறுப்பினர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
2019ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஆனதும், சாய்ந்தமருதுக்கான சபையை வழங்கும்படி வர்த்தமானி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத் தொடந்து சாய்ந்தமருதில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
உடனடியாக சஜித் கட்சியின் மரிக்காரும் ஹிருணிக்காவும், முஸ்லிம் பயங்கரவாதிகள் வெடித்து இறந்த சாய்ந்தமருதுக்கு, மஹிந்த சபை வழங்கியுள்ளார் எனப் பாராளுமன்றிலும் ஊடகங்களிலும் பேசினர்.
இதனை தொடர்ந்து, மேற்படி வர்த்தமாணி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டது. எனினும் இன்னொரு வர்த்தமாணி மூலம் இரத்து செய்யப்படவில்லை.
இந்நிலையில், இவ்வாறு ரத்து செய்யப்படாத நிலையில், சபையும் வழங்காம கல்முனைக்கான தேர்தல் வைப்பது அடிப்படை உரிமை மீறல் என, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
18 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago