Janu / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் பெரும் தொகை போதைப் பொருட்களுடன் இருவர் வாகனமொன்றில் நடமாடுவதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 61 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைத்தொலைபேசிகள் நிறுத்தல் தராசு ஏ.ரி.எம். வங்கி அட்டைகள் வாகனம் ஒன்று என்பன சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்

2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago