Janu / 2026 மார்ச் 23 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் க. சுரேஸ் திங்கட்கிழமை (23) அன்று நடந்த பீடாதிபதி தேர்தலில் 29 வாக்குகள் பெற்று புதிய பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் க. சுரேஸ் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் தலைவராக கடமையாற்றி வருகின்றார். இவர் அவுஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லான்ட் தொழில்னுட்ப பல்கலைக் கழகத்தில் சுற்றுலாத்திறையில் தனது கலாநிதி பட்டத்தினை முடித்து, தற்போது பொருளாதார பேராசிரியராக கடமையாற்றி வருகின்றார்.
தனது பீடாதிபதி கடமையை செவ்வாய்க்கிழமை (24) அன்று பொறுப்பேற்கவுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடமானது அதிக எண்ணிக்கையிலான மாணவர்களையும் அதிகளவான துறைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 minute ago
24 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
35 minute ago