Janu / 2024 ஜூலை 07 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் , ஞாயிற்றுக்கிழமை (7) அன்று நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்டகப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய யசோதரன் புண்ணியராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான சனிக்கிழமை (06) அதிகாலை வீட்டில் இருந்து கிருமிச்சை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார் . பகலாகியும் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது குளத்தின் கரையில் அவருடைய தோணி மாத்திரமே இருப்பதை அவதானித்துள்ளனர் .
இது தொடர்பில் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்களால் இயந்திர படகு மூலம் மேற்கொண்ட தேடுதலின் போது நீரில் மூழ்கிய நிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையிவ் ஒப்படைத்தனர்
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்

19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025