Freelancer / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர். ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நான்கு பேருடன் பயணித்த ஆழ்கடல் மீன் பிடி படகு கடலலையின் சீற்றம் காரணமாக அனர்த்தத்துக்குள்ளாகிய நிலையில் படகில் இருந்த ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போய் உள்ளார்.
வாழைச்சேனை, பிறந்துரைச்சேனை கலைஞர் வீதியில் உள்ள முஹமட் கஜுன் பயாஸ் (24 வயது) இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:
வாழைச்சேனை ஆழ்கடல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (13) மூன்று பேருடன் சென்ற படகு, மீன்பிடியில் ஈடுபட்ட பின்னர், வாழைச்சேனை துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையில், படகில் இருந்தவர்கள் அதன் உரிமையாளருக்கு, படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் உள்ளது; அதைக் கொண்டு கரை சேர்ப்பதற்கு மற்றைய படகு ஒன்றை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு வாழைச்சேனை மீன்பிடித்துறை முகத்திலிருந்து சாதாரண படகுடன் நான்கு பேர் பயணித்துள்ளார்கள். கடலலையின் சீற்றம் காரணமாக படகில் இருந்த ஒருவர் கடலில் விழுந்துள்ளார். இவ்வேளை ஏனைய மூவரும் குறித்த படகுடன் வாழைச்சேனை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பாக, வாழைச்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை, குறித்த சம்பவம் உட்பட இவ்வாறு பல உயிரிழப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. பல கோடி பெறுமதியான சொத்துகளை இழந்திருக்கின்றோம். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்துக்கான ஒரு மீட்புப் பணி படகைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன்,காணாமல் போன மீனவரின் சடலத்தைக் கண்டால் வாழைச்சேனை துறைமுகத்துக்கு உரிய தகவலை வழங்குமாறும் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago