2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

காரில் போதைப்பொருள் கடத்திய டிலக்ஷன் கைது

Ilango Bharathy   / 2021 ஜூலை 19 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பில் இருந்து  வாழைச்சேனைக்கு காரில் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஜஸ் போதைப்பொருளை  கடத்திச் சென்ற பிரபல போதைப் பொருள் வியாபாரி டிலக்ஷன், நேற்றிரவு (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருடன், மேலும் இருவரையும்  வாழைச்சேனை, கும்புறுமூலை சந்தியில் வைத்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து, தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.



வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, கும்புறுமூலைச் சந்தியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனையை நோக்கிப் பிரயாணித்த காரை வழிமறித்து
சோதனையிட்டனர். 

இதன்போது, காரில் மறைத்துவைக்கப்ப சுமார் 13 இலச்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டதுடன், பிரபல போதைப்பொருள் வியாபரியான டிலக்ஷன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.

சந்தேகநபர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .