Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2021 ஜூன் 15 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் 150 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
“கடந்த தினங்களோடு ஒப்பிடும் போது சிறிது குறைவான எண்ணிக்கையாக இது காணப்படுகிறது” என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபிக், இன்று (15) தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 45 பேரும், இரண்டு மரணங்களும் ஏற்பட்டுள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் 64 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 23 பேரும், இரண்டு மரணங்களும் ஏற்பட்டுள்ளது.கடந்த 7 நாட்களில் 1166 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 39 மரணங்களும் ஏற்பட்டுள்ளது.
இக்காலகட்டம் முக்கியமான காலமாக இருப்பதால் பொது மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அறிவுரைகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலமாக, இப்போது காணப்படும் சிறிய அளவிலான தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் குறைய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்தார்.
நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சு கணிசமான அளவு தடுப்பூசிகளை எல்லா இடங்களுக்கும் வழங்க உத்தேசித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் கிட்டத்தட்ட முற்றாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் மிகுதியாக இருப்பவைகளை தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் முன்னிலை உத்தியோகத்தர்களுக்கும், அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்ட விசேட தொழில் குழுவினருக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் தெரிவித்தார்.
திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 3,838 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 3784 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,769 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 2,058 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 11,449 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
57 minute ago
2 hours ago