Editorial / 2026 மார்ச் 23 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

அபு அலா
இலங்கை மற்றும் அரபு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான நட்புறவுச் சந்திப்பொன்று (21), கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானியின் (Khalid bin Hamood Al-Qahtani) அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில், இலங்கைக்கான பல்வேறு அரபு நாடுகளின் தூதுவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புனித ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு; ஒற்றுமை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.
பெருநாளைச் சிறப்பிக்கும் வகையில், தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பெறுமதிகள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
இச்சந்திப்பானது, இலங்கை மற்றும் அரபு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.



15 minute ago
24 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
35 minute ago