2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலை அதிகாரி கைது

Ilango Bharathy   / 2021 ஜூலை 20 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

ஹொரோய்ன் போதைப்பொருளுடன் கடமைக்குச் சென்ற திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி ஒருவர், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்படி சிறைச்சாலை அதிகாரியை நீண்ட காலமாக நோட்டமிட்ட பொலிஸார், அவரைக் கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 14 கிராம் 602   மில்லிகிராம் ஹொரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 

29 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் இவர், சிறைக் கைதிகளுக்கு விற்பனை செய்வதற்காகவா போதைப்பொருளைக் கொண்டு சென்றார் என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .