Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 நவம்பர் 21 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங்க்கு (Qi Zhenhong) இடையிலான கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்றது.
கடந்த 18 ஆம் திகதி கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில், தூதுவரை சந்தித்த ஆளுநர் விடுத்த அழைப்பை ஏற்று கீய் சென்ஹோங்க்கு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்து, மாகாண அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணம் உட்பட இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புதிய அரசாங்கமும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுநரும் கடுமையாக உழைப்பார்களென தான் உறுதியாக நம்புவதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
அதற்குத் தேவையான ஆதரவை வழங்க, சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை ஹிங்குரான சீனி தொழிற்சாலைக்கு சீனாவின் தொழில்நுட்ப உதவியை சீன அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தனது அழைப்பை ஏற்று வருகை தந்த தூதுவருக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், கிழக்கு மாகாணம் பல்லின மக்கள் வாழும் மாகாணமாக இருப்பதால், அதன் தேசிய ஒருமைப்பாடும், வேற்றுமையும் எமது பலமாகும் எனவும் சீன அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ச்சியாகத் தேவைப்படுவதாகவும் மாகாணத்தின் திட்டங்களுக்கு சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் ஆளுநருக்கும் சீன தூதுவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அபு அலா
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago