Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ ஹுஸைன்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ‘டிஜிட்டல் ஹொஸ்பிட்டல்’ அங்குரார்ப்பண நிகழ்வு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் ஜீ. சுகுணன் தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் ஊடாக, வெளிநோயாளர் பிரிவின் அனைத்து நடவடிக்கைகளும் கணினி மயப்படுத்தி, கடதாசிப் பாவனையை நிறுத்துவதுடன் ‘பார்கோட்’ முறையிலான மருத்துவ அட்டையும் நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.நோயாளி தொடர்பான சகல விவரங்களும் கணினியில் பதிவுசெய்யப்படுவதுடன், அவர்களின் ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள், சிகிச்சையின் விவரங்கள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட உள்ளமை சிறப்பம்சமாகும்.
இங்கு, டொக்டர் ஜீ. சுகுணன் கருத்து தெரிவிக்கையில், தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஏனைய வைத்தியசாலைகளில் 35 வயதுக்கு மேற்பட்ட சாதாரண சுகதேகிகளை, பூரண பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் சுகாதார பதிவேடு கணினி மயப்படுத்துவதுடன் அவர்களைத் தொடர்ச்சியாக அவதானிக்கும் முறைமையும் உலக வங்கியின் அனுசரணையுடன் PSSP எனும் திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியை உட்புகுத்துவதன் மூலமாக துல்லியம், விரைவு, இலாபகரமான வைத்திய சேவையை மக்களுக்கு தம்மால் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago