Mayu / 2026 மார்ச் 24 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் திங்கட்கிழமை (23) கைப்பற்றப்பட்டுள்ளது.

கந்தளாய் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம். சஞ்சீவ பண்டார அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மலிந்த செனவிரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிலையம் (Hardware) மற்றும் மணல் களஞ்சியசாலை ஒன்றினை முற்றுகையிட்டனர்.
இதன்போது, எவ்வித சட்டபூர்வமான அனுமதிப்பத்திரமும் இன்றி, மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (24) மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அ . அச்சுதன்
5 minute ago
5 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 minute ago
24 minute ago
44 minute ago