Janu / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறி மற்றும் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், மட்டக்களப்பு - கொழும்பு வீதியின் புனாணை 126 மைல்கல் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது.
ரிதிதென்னை பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் முஹம்மது நவாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago