Ilango Bharathy / 2021 ஜூலை 20 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட 28 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்தி பெறும் பயனாளிகளின் கா.பொ.த உயர்
தரம் கற்கத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு ‘சமுர்த்தி சிப்தொர கல்விப் புலமைப்
பரிசில்‘ வழங்கும் வைபவம், நேற்று (19) நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் அதிதியாகக்
கலந்துகொண்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசிலை வழங்கி
வைத்தார்.
2020/2022ஆம் ஆண்டு கா.பொ.த உயர் தரம் கல்வி கற்கும் 124 மாணவர்களுக்கு தலா
1,500 ரூபாய் வீதம் முதல் 10 மாதத்துக்கு 18 இலட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டதாக, தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுஸைன் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago