Editorial / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு.
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் உவைஸ் பாரூக் ஞாயிறுக்கிழமை (07) அன்று தெரிவித்தார்.
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதால்
மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுள்ளார்.
குறிப்பாக விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் உப உணவுப் பயிற்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நோய் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காய்ச்சல், தசைகளில் கடமையான வலி, கண் விழி சிவப்பு நிறம் அடைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைவடைதல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் எந்த நோயின்
அறிகுறிகளாகும்.
உடலில் வெட்டுக் காயங்கள், சிராய்ப்புகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத அளவிலான நுண்ணிய காயங்கள் மூலமும், வயலுக்கு அண்மையாக காணப்படுகின்ற
நீரோடைகளில் குளிக்கும் போது கண்களில் உள்ள நுண்ணிய இழையங்கள் மூலமும் இந்த பற்றீரியா எமது உடலில் உட்புகுகிறது.
ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்கு நேரடியாக பரவுவதில்லை. எனவே அதிக தொற்றுக்குள்ளாக கூடிய வயல் வெளிகளில் பணி புரிவோர் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் விவசாயிகள் சுகாதார வைத்தியதிகாரி
அலுவலகத்துடன் அல்லது தத்தமது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடன் தொடர்பு கொண்டு நோய் தடுப்பு தொடர்பான மாத்திரைகளை பெற்றுக் கொள்ளுமாறும், கொதித்தாறிய நீரை பருகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
5 minute ago
20 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
29 minute ago
37 minute ago