Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தராக கணபதிப்பிள்ளை மதிவண்ணன், திங்கட்கிழமை (09) கடமையை பொறுப்பேற்றார்.
1994ஆம் ஆண்டு அரசபணியில் இணைந்த இவர் கலைப் பட்டதாரியாவார். கல்வி அமைச்சு, பட்டிப்பளை பிரதேச செயலகம் ஆகியவற்றில் முகாமைத்துவ சேவை அலுவலராகவும், 2015ஆம் ஆண்டு பொது முகாமைத்துவ சேவை அதிசிறப்பு (சுப்ரா) தர பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக உத்தியோகத்தராக தெரிவுசெய்யப்பட்டு, நொச்சிமுனை தொழில் நுட்ப கல்லுரியின் பதிவாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர், மட்டு. சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவராவார்.
6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026